வடக்கு, கிழக்கு மக்களின் ஆதரவின்றி நாட்டை முன்னேற்ற முடியாது: அனுர

Date:

வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் ஆணையில்லாமல் நாட்டை முன்னேற்ற முடியாது என ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க கேட்டுக் கொண்டார்.

அதேநேரம் அனைத்து இன மக்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு, முன்னேற்றகரமான இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும் தங்களுக்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்  இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது இன,மத, மொழி கடந்து ஒற்றுமையுடன் நாம் பயணிக்கும் போதே இந்த நாட்டை முன்னேற்ற முடியும்.

எனவே, எமக்கான ஆதரவை அனைவரும் ஒருமித்து வழங்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு சகலரது ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும் அரசாங்கம் அமைக்கப்படும்போது எந்தவித பாகுபாடுகளுமின்றி ஆட்சி நடைபெறும்.

இதனூடாக நீண்ட காலமாக இருந்து வருகின்ற பிரிவினை அரசியலுக்கு முடிவு காட்டி இன, மத பேதமில்லாத ஒன்றிணைந்த அரசியலை மேற்கொள்ள முடியும்.

இந்த பயணத்தில், அனைவரும் எம்முடன் இணைய வேண்டும். அனைவரும் சம உரிமைகளுடன் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழக் கூடியதான ஆட்சி அமையப் பெறுவதற்கு எமக்கான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குமாறு நான் தமிழ் தலைவர்களிடன் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...