கண்டி – தெல்தெனிய, கும்புக்கந்துர பகுதி, விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.
திஹாரிய, ஜயவர்தனபுர பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான தம்பதியினரே, இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள பெண்ணின் கிராமத்திற்குச் சென்ற போது, கும்புக்கந்துர பிரதேசத்தில் இருந்து விக்டோரியா நீர்த்தேக்கத்தில் உள்ள “மோல் கல்” என்ற இடத்திற்கு இவர்கள் இருவரும் (15) திங்கட்கிழமை நண்பகல் நீராடச் சென்றுள்ளனர்.