அமானா வங்கியின் சித்தீக் அக்பர், AAFI இன் தலைவராக நியமனம்

Date:

அமானா வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவர் சித்தீக் அக்பர், மாற்று நிதிச் சேவை நிறுவனங்களின் சம்மேளனத்தின் (AAFI) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமையை அமானா வங்கி கௌரவித்துள்ளது.

வட்டிசாராத இஸ்லாமிய வங்கிகள் பிரிவில் சித்தீக் கொண்டுள்ள தலைமைத்துவத்தை உறுதி செய்யும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தின் போது இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது.

சந்தைப்படுத்தல் மற்றும் கூட்டாண்மை தொடர்பாடல்கள் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் எனும் நிலையில் அமானா வங்கியுடன்  சித்தீக் இணைந்து கொண்டதுடன், பின்னர் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவராக அவர் பதவி உயர்வு பெற்றிருந்தார்.

அமானா வங்கியுடன் இணைந்து கொள்வதற்கு முன்னதாக, நிதி, தொலைத்தொடர்பாடல் மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் போன்ற துறைகளில் சந்தைப்படுத்தல் முகாமையாளர் மற்றும் வர்த்தக நாம முகாமையாளர் எனும் பதவிகளை இவர் வகித்துள்ளார். இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தின் பொருளாளராகவும் சித்தீக் செயலாற்றியுள்ளார்.

அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...