ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே எழுபது இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி!

Date:

2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த தொகையில் 18 வயதை பூர்த்திசெய்த 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளடங்குவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலுக்கு ஆயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்திற்கான வாக்காளர் பதிவேடுகள் தயாரிப்பது தொடர்பான நடவடிக்கைகளை இன்று தொடக்கம் ஆரம்பித்துள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பதிவேடு தயாரிக்கும் நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடைவதாகவும் தேர்தல் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, வாக்களிக்க தகுதி இருந்தும் வாக்காளர் பதிவேட்டில் பெயர் சேர்க்கப்படாத நபர்கள், தங்களின் பெயர்களை உரிய பட்டியலில் சேர்க்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஈரானில் 5 நாள் துக்கம் தினம் அனுஷ்டிப்பு!

ஈரானில் 5 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டவுள்ளதாக அன் நாட்டின் ஆன்மீகத் தலைவர்...

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பையேற்று இலங்கை வரும் எலான் மஸ்க்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ்...

‘ஈரான் ஜனாதிபதி  மரணத்துக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை’: இஸ்ரேல் திட்டவட்டம்

ஈரான் ஜனாதிபதி  மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை;...

ஈரான் ஜனாதிபதியின் மறைவு பேரதிர்ச்சி: மஹிந்த இரங்கல்

ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...