ஓமானில் இலங்கையர் மூவர் மர்மமான முறையில் உயிரிழப்பு: இருவர் கைது!

Date:

ஓமானில் Mabela Al Hain நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த இளைஞர்களுடன் தங்கியிருந்த ஏனைய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்புக்கான காரணம் கண்டறியப்படாத போதிலும், மாரடைப்பு காரணமாக அவர்கள் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஓமான் தூதரக அதிகாரிகளின் கூற்றுப்படி, உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மஹியங்கனை, கிரந்துருகோட்டே மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே ஓமானின் இலங்கை தூதரகம் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த இளைஞர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல்களை வழங்குவதற்கான நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...