சுகயீன விடுமுறையில் பணிக்கு சமூகமளிக்காத சிறைக்காவலர்கள் குழு தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு காணுமாறு கோரி நேற்று முதல் சிறைச்சாலை அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.