பலஸ்தீன யுத்தத்தை நிறுத்துமாறு கோரி கொழும்பில் அமைதி பேரணி

Date:

பலஸ்தீன யுத்தத்தை நிறுத்துமாறு கோரி இன்று (17) கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டம் விஹாரமகாதேவி பூங்காவிலிருந்து பேரணியாக  அமெரிக்க தூதரகம் வரை சென்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘போர் எதிர்ப்பிற்கான உலகளாவிய கூட்டணி, சுதந்திர பாலஸ்தீன இயக்கம்’, நாட்டில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபடும் தர்ம சக்தி அமைப்பின் பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது போராட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகத்தில் மனுவொன்றையும் கையளித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி, ராஜித சேனாரத்ன ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...