டயகம சிறுமியின் மரணம்: ரிசாத் பதியுதீன் விடுதலை!

Date:

3 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு சொந்தமான வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய டயகம சிறுமி தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து ரிசாத் பதியுதீன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்கு இலக்காகி டயகம சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவத்தில் ரிஷாத் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் சிறுமியை பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்திய நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு  முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 16 வயதுடைய ஹிஷாலினி என்ற சிறுமி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.

டயகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி வீட்டின் வறுமை காரணமாக முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணிப்பெண்ணாக பணி புரிந்து வந்த நிலையில் உடலில் தீ பரவி தீக்காயங்களுடன் உயிரிழந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட நால்வருக்கு எதிராக இவ்வாறான வழக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு தெற்கு பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் இந்த மூவருக்கு எதிராகவும் கொடுமை, மனித கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

நான்காவது சந்தேகநபரான றிசாத் பதியுதீன் மற்றும் ஐந்தாவது சந்தேகநபரான பதியுதீன் அப்துல் றிஷாட் ஆகியோருக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் அவர்களை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

டயகம பிரதேசத்தில் வசித்து வந்த ஹிஷாலினி ஜூட் குமார் என்ற சிறுமி உடலில் தீப்பிடித்து உயிரிழந்துள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில், சுமார் 20 பேரின் வாக்குமூலங்களை குற்றப்புலனாய்வு திணைக்களம் பதிவு செய்திருந்ததுடன், அந்த விசாரணைகளின் அடிப்படையில் மேற்படி மூன்று பிரதிவாதிகள் உட்பட ஐந்து பேர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

 

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...