புத்தளம் மாவட்டத்தில் 8,780 குடும்பங்கள் பாதிப்பு:வெள்ளத்தில் சிக்குண்ட குடும்பத்தை மீட்ட கடற்படை

Date:

சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் 8,780 குடும்பங்களைச் சேர்ந்த 32,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 9 பிரதேச செயலகப் பிரிவில் 78 கிராம சேவகர் பிரிவில் 8,780 குடும்பங்களை சேர்ந்த 32,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 12 கிராம சேவகர் பிரிவில் 6,815 குடும்பங்களைச் சேர்ந்த 25,529 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும்  மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது.

இதேவேளை, புத்தளம் – முந்தலம் பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்குண்ட மூன்று பேர் கொண்ட குடும்பத்தினை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் குடும்பம் சிக்குண்டிருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

பெரியகடவல ஏரியின் நீர் மட்டம் உயர்வடைந்ததன் காரணமாக முந்தலம் பிரதேசத்தில் வெள்ளம் ஏற்பட்டள்ளது.

இந்த நிலையில், சவாலான சூழ்நிலையாக இருந்தபோதிலும், கடற்படையினர் வெள்ளத்தில் சிக்குண்டிருந்த குடும்பத்தை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக தெரியவருகிறது.

 

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...