”மின்சாரக் கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனைகளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கு நாளை வரை கால அவகாசம் வழங்குமாறு” இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கடந்த 10 ஆம் திகதி இலங்கை மின்சார சபை உரிய முன்மொழிவுகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதன்படி, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு மற்றுமொரு நினைவூட்டலை விடுத்திருந்த நிலையில், உரிய முன்மொழிவுகளை சமர்ப்பிக்க நாளை வரை கால அவகாசம் வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
உரிய முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்ற பின்னர் மின் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும், மின் கட்டண குறைப்பு சதவீதத்தை ஜூலை மாதம் அறிவிக்க முடியும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.