அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: ஜனாதிபதி

Date:

அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கால்நடை உற்பத்தி மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரிவுக்குட்பட்ட பல ஊழியர் சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொழிற்சங்க பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதுடன், இந்த வருடமும் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்னிலையில் அடுத்த வருடம் அரசாங்க ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு வழங்கப்படும் எனவும், இந்த வருடமும் சம்பள அதிகரிப்பு செய்யப்படுமானால் நாடு மீண்டும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை இந்த கலந்துரையாடலில் கால்நடை மருத்துவர்கள் சங்கம், கால்நடை அபிவிருத்தி ஆலோசகர்கள் சங்கம் மற்றும் கால்நடை அபிவிருத்தி துறை பணியாளர்கள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...