மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் படவல, பத்தேகம ஆரம்ப பாடசாலைக்கு அருகில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மிதிகம பொலிஸார், வெலிகம பொலிஸாருடன் இணைந்து பல பொலிஸ் குழுக்கள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.