‘சர்வ ஜன பலய’: கம்மன்பில, விமல், திலித் புதிய கூட்டணி ஸ்தாபிப்பு

Date:

‘சர்வ ஜன பலய” (சர்வசன அதிகாரம்) என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டணிக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பில் இன்று (27) காலை இடம்பெற்றது.

”ஒன்றிணைந்து கட்டியெழுப்பும் நாடு – மகிழ்ச்சி நிறைந்த நாடு” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

பிவித்துறு ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, மவ்பிம ஜனதா கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மேலும் சில அரசியல் கட்சிகள் இந்த கூட்டணியுடன் இணைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, தொழிலதிபர் திலித் ஜயவீர மற்றும் புத்திஜீவிகள் பலர் இந்த  புதிய அரசியல் கூட்டணியை தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...