விபத்தில் சிக்கிய ஈரான் ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டரின் சிதைவு என கருதப்படுவதிலிருந்து வெளிவரும் வெப்பத்தை தனது ஆளில்லா விமானங்கள் கண்டுபிடித்துள்ளன என துருக்கி தெரிவித்துள்ளது.
ஈரானில் மீட்பு பணிகளிற்கு துருக்கி பயன்படுத்தி வரும் அகின்சி ஆளில்லா விமானம் விபத்தில் சிக்கிய ஹெலிக்கொப்டரின் சிதைவிலிருந்து வெளியாகும் வெப்பத்தை கண்டுபிடித்துள்ளது என கருதுவதாக துருக்கி தெரிவித்துள்ளது.
இந்த விபரங்களை துருக்கி ஈரானுடன் பகிர்ந்துகொண்டுள்ளது. துருக்கியின் ஆளில்லா விமானங்கள் ஈரான் ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டர் காணப்படுவதாக தெரிவித்துள்ள பகுதிக்கு ஈரான் தனது மீட்பு பணியாளர்களை அனுப்பியுள்ளது.