இலங்கையும் சவூதியும் முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Date:

உலகப் பொருளாதார மன்றத்தின் முதல் சிறப்புக் கூட்டம் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நகரில் 28, 29 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் உலகின் பல நாடுகளது தலைவர்களும், அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பங்குபற்றி உள்ளார்.

இதன்போது சவூதி அரேபிய முதலீடுகள் அமைச்சர் காலித் அல் பாலிஹ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட நாள் தேவையாக இருந்துள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்குமிடையில் முதலீடுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இம்மாநாட்டில் இலங்கையின் தொழில் வல்லுனர்களையும் துறைசார் வல்லுனர்களையும் அமைச்சர் அலி சப்ரி  சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பஹன ஊடக நிறுவனத்தின் தலைவரான ஸெய்யித் சாலிம் மௌலானா அவர்களும்  கலந்துகொண்டார்.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...