இலங்கைக்கான ஈரான் தூதுவர் மீது தாக்குதல் நடத்திய வர்த்தகருக்கு பிணை!

Date:

இலங்கைக்கான ஈரான் தூதுவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட வர்த்தகரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபரான வர்த்தகர் இன்று (22) புதன்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கொழும்பு கோட்டை நீதவான் கோசல சேனாதீர இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இவர் கடந்த 18 ஆம் திகதி கொழும்பில் உள்ள பிரபல வர்த்தக வளாகமொன்றின் வாகன தரிப்பிடத்தில் வைத்து இலங்கைக்கான ஈரான் தூதுவரான அலிரேசா டெல்கோஷ் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...