இலங்கைக்கான துருக்கி தூதுவராக செமிஹ் லுட்ஃபு துர்குட் (Semih Lütfü Turgut) (52) நியமிக்கப்பட்டுள்ளார்.
துருக்கி ஜனாதிபதி தையிப் அர்தூகானால் இந்த நியமனம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கைக்கான துருக்கி தூதுவராக செயற்பட்ட திருமதி ராகிபே டெமெட் செகெர்சியோகுளு அண்மையில் தனது பதவிக் காலத்தினை நிறைவு செய்துகொண்டு நாடு திரும்பியுள்ளார்.
இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இலங்கைக்கான துருக்கியின் நான்காவது தூதுவராக இவர் நியமிக்கப்பபட்டுள்ளார்.
ஸ்கொட்லாந்தின் தலைநகரான எடின்பேர்கிற்கான துருக்கியின் முதலாவது கொன்சியூலர் ஜெனரலாக இவர் சுமார் ஐந்து வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.
துருக்கியின் வெளிநாட்டு சேவையில் சிரேஷ்ட அதிகாரியான இவர், பல நாடுகளிலுள்ள துருக்கி தூதுவராலயத்திலும் துருக்கி வெளிநாட்டு அமைச்சிலும் கடமையாற்றியுள்ளார்.
பல்வேறு இராஜதந்திர பதவிகளை வகித்த இவர் முதற்தடவையாக தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.