இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் ஒரே இரவில் 24 பேர் பலி

Date:

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஒரே இரவில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு மற்றும் மத்திய காசாவில் குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசா நகரின் மையத்தில் அமையப்பெற்றுள்ள குடியிருப்பு பகுதியில் நேற்றுமுன் தினமும் இஸ்ரேலிய இராணுவம் ஷெல் தாக்குதல் மேற்கொண்டது.

இதன்போது 10 குழந்தைகள் உட்பட 16 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் நேற்று வியாழக்கிழமை மத்திய காசா பகுதியில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் வீடொன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சுமார் 08 பேர் உயிரிழந்தனர்.

தீவிரவாதிகளை இலக்கு வைத்து காசா பகுதி முழுவதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரேலிய பாதுகாப்பு படை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...