ஈரான் ஜனாதிபதி பலி: உலகம் பாதுகாப்பானதாக மாறும்; அமெரிக்க அதிகாரியின் சர்ச்சைக் கருத்து!

Date:

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்துவிட்டால், உலகம் பாதுகாப்பான மற்றும் சிறந்த இடமாக இருக்கும் என புளோரிடாவின் அமெரிக்க செனட்டர் றிக் ஸ்கொற் (Rick Scott) தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் பலி ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் நீண்ட காலமாக பகை இருந்தது வருகின்றது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது.

இந்நிலையிலேயே, ஹெலிகாப்டர் விபத்தில் பலி ஈரான் ஜனாதிபதி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து றிக் ஸ்கொற் தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஈரான் ஜனாதிபதி ஒரு கொடுங்கோலன், அவர் நேசிக்கப்படவில்லை அல்லது மதிக்கப்படவில்லை.

அவர் உயிரிழந்துவிட்டால், கொலைகார சர்வாதிகாரிகளிடமிருந்து தங்கள் நாட்டை மீட்டெடுக்க ஈரானிய மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஹஜ் பயண முகவர் சங்கத்தின் தலைவராக அல்ஹாஜ் அம்ஜடீன் தெரிவு

2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவராக அம்ஜா...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர்...

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...