உலகம் முழுவதும் இருந்து மருந்துகளை மீளப்பெறும் அஸ்ட்ராஜெனெகா

Date:

பிரிதானியாவை தளமாகக்கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா தனது கொவிட் – 19 தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இருந்து மீளப்பெறுவதற்கு தீர்மானித்துள்ளது.

அஸ்ட்ராஜெனெகாவின் கொவிட்-19 தடுப்பூசி, அரிதான மற்றும் ஆபத்தான பக்க விளைவை ஏற்படுத்தும் என்று நீதிமன்ற ஆவணங்களின் ஊடாக அண்மையில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்நிலையிலேயே, உலகம் முழுவதும் இருந்து தடுப்பூசிகளை மீளப்பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தடுப்பூசி இனி தயாரிக்கப்படவோ அல்லது விநியோகிக்கப்படவோ மாட்டது என நிறுவனம் அறிவித்துள்ளாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிறுவனம் அதன் “சந்தைப்படுத்தல் அங்கீகாரத்தை” மீளப் பெற்றுள்ளது. இதன்படி, தடுப்பூசி இனி ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்த அங்கீகரிக்கப்படமாட்டது.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...