சில பொலிஸ் அதிகாரிகள் யுக்திய நடவடிக்கையை தவறாக பயன்படுத்துகிறார்கள்: எம்.பி.க்கள் குற்றச்சாட்டு

Date:

போதைப் பொருள் ஒழிப்புக்கான யுக்திய நடவடிக்கையை சில பொலிஸ் அதிகாரிகள் தவறாக பயன்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று நாடாளுமன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சிறு குற்றங்களுக்காக யுக்திய நடவடிக்கையின் கீழ் பாடசாலை சிறுவர்கள் உட்பட அப்பாவிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் குற்றம் சாட்டியிருந்தனர்.

குருநாகல் மாவட்டத்தில் வீதிகளில் இருக்கும் இளைஞர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 54ன் கீழ் குற்றஞ்சாட்டப்படுவதால் பாரிய பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொண்டுள்ளதாக சமன்பிரிய ஹேரத் தெரிவித்தார்.

நேற்று நாரம்மலாவில் நடந்த சண்டையில் பதினொரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒரு சிறுவனும் உள்ளடங்குவதாக அவர் கூறினார்.

நியாயமற்ற முறையில் நடந்து கொள்ளும் பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இது குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமன்பிரிய ஹேரத் வலியுறுத்தினார்.

இதேவேளை இதேபோன்ற சம்பவங்கள் பெரும்பாலான மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாகவும்இ சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறிக்கொண்டு சட்டத்தை கையில் எடுப்பது தவறு எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் டோலவத்த தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

அடுத்து வரும் 36 மணித்தியாலங்களுக்கு மழை நீடிக்கும் வாய்ப்பு!

அடுத்து வரும் 36 மணித்தியாலங்களில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி,...

பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் வரைவுச் சட்டமூலம்’ உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கே – முன்னிலை சோசலிசக் கட்சி சாடல்!

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ளபயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் Protection of the State...

வேளாண் தொழில் நுட்பம் மற்றும் நிலையான உணவு உற்பத்தியில் இலங்கை – கட்டார் கூட்டுறவு விரிவாக்கம்

வேளாண் தொழில்நுட்பம் (Agri-technology), காலநிலைக்கேற்ற விவசாயம் மற்றும் நிலையான உணவு உற்பத்தி...

சவூதி மன்னரிடம் அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குமாறு இலங்கை முஸ்லிம் எம்.பிக்கள் கூட்டு வேண்டுகோள்.

சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் எதிர்கொண்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் என்பவருக்கு...