புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் ஆளுநர் அலுவலம் தெரிவித்துள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது பெய்து வரும் கடும் மழையினால் புத்தளத்திலுள்ள தாழ்நிலப் பகுதிகளான கடையாக்குளம், தில்லையடி, ரத்மல்யாய, பாலாவி, குவைட் நகர் உள்ளிட்ட பல பிரதேசங்கள் நேற்றிரவு முதல் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.
இதன் போது, வீடுகளுக்குள் வெள்ள நீர் உற்புகுந்துள்ளமையினால் சுமார் 150இற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து.