திருமண வாழ்வை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கான இலவச கற்கைநெறியை பூர்த்திசெய்தவர்களுக்கு சான்றிதழ்கள்..!

Date:

லைப்பொண்ட் சமூக சேவை நிறுவனம் நடாத்திய திருமண வாழ்வை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கான இலவச கற்கைநெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் சனிக்கிழமை (25) வட்டதெனியவில் அமைந்துள்ள கதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரியில் இனிதே நடைபெற்றது.

கதீஜதுல் குப்பரா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் ஏ.எஸ்.எம். பாரூக் (அல் அஷ்ஹரி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் லைப்பொண்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.ஆர்.எம். ஸரூக் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

லைப்பொண்ட் நிறுவனத்தின் வளவாளர் அஷ்ஷெய்க் அக்ரம் அப்துஸ் ஸமத் அவர்கள் இந்நிகழ்வில் விசேட உரை நிகழ்த்திய அதேவேளை லைப்பொண்ட் நிறுவனத்தின் இயக்குனர் அஷ்ஷெய்க் முஹம்மத் பகீஹுத்தீன், கதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரியின் செயலாளர் சாஜஹான் உடையார் ஆகியோரும் சிறப்புரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் கல்லூரியின் மாணவிகள்,பெற்றோர்கள்,கல்லூரியின் விரிவுரையாளர்கள்,பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

லைப்பொண்ட்  நிறுவனம் இலாப நோக்கற்ற ஒரு சமூக சேவை நிறுவனமாகும். உத்தரவாத கம்பணியாக பதிவு செய்யப்பட்ட இந்நிறுவனம் நாடளாவிய ரீதியில் பல சமூக வேலைத் திட்டங்களை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...