பணயக்கைதிகளை விடுவிக்க கோரி டெல் அவிவில் ஒன்றுதிரண்ட பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள்

Date:

போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக பணயக்கைதிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்து பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டெல் அவிவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் “போர் புனிதமானது அல்ல, வாழ்க்கை” என்று கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மோதலை நீடிப்பதை நோக்கமாக கொண்டுள்ளார் எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு பதிலாக காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை இடைநிறுத்துவது தொடர்பாக எகிப்து மற்றும் கத்தாரின் தூதுவர் கெய்ரோவில் நீண்ட கால பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் போது 40 நாட்கள் போர் இடைநிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பலஸ்தீனிய கைதிகளை விடுவிப்பது குறித்து கலந்துரையாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...