பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பும் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவருக்கு பிரியாவிடை!

Date:

தமது பதவிக் காலம் முடிந்து நாடு திரும்பும் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் பி.எம் ஹம்சா அவர்களுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வு நேற்று ரியாத்தில் இடம்பெற்றது.

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை சமூகம் சார்பில், ரியாத்தில் உள்ள ஹொலிடே இன் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பௌத்த, இந்து,கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் தூதுவருக்குப் பாராட்டுத் தெரிவித்ததுடன் சினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தூதுவர் பி.எம். அம்சா இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் 29 வருடங்களுக்கும் மேலான இராஜதந்திர அனுபவத்துடன் இலங்கை வெளிநாட்டு சேவையின் (SLFS) உறுப்பினராவார்.

நவம்பர் 2021 இல் சவூதி  அரேபியாவுக்கான இலங்கையின் தூதுவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் ஜூலை 2019 முதல் அக்டோபர் 2021 வரை பொருளாதார விவகார அமைச்சில் கூடுதல் செயலாளராக பணியாற்றினார்.

ஜனவரி 2016 முதல் ஜூன் 2019 வரை ஜோர்ஜியா மற்றும் உக்ரைனுக்கான துருக்கி குடியரசின் இலங்கைத் தூதுவராகவும், ஆகஸ்ட் 2012 முதல் ஜூலை வரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதுவராகவும் பணியாற்றினார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...