பாராளுமன்றம் இன்று கூடுகிறது

Date:

பாராளுமன்றம் இன்று திங்கட்கிழமை, நாளை (14) செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களிலும் கூடவுள்ளதாக, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வியாழக்கிழமை (09) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கமைய இன்று காலை 9.30 மணிக்குபாராளுமன்றம் கூடவுள்ளதுடன், காலை 9.30 மணி முதல் மு.ப 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள், மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான அறிவித்தல், பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், நிதிச் சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள், அந்நியச் செலவாணி சட்டத்தின் கீழான நான்கு ஒழுங்குவிதிகள், ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஆறு தீர்மானங்கள், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளை, சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் என்பன விவாதத்தின் பின்னர் நிறைவேற்றப்படவுள்ளதுடன், ஜெயா கென்டெய்னர் டேர்மினல்ஸ் லிமிடட் நிறுவனத்தின் (2022)ஆம் ஆண்டின் வருடாந்த அறிக்கை விவாதமின்றி நிறைவேற்ற சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...