நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க நேற்று (14) மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
வழக்கை பரிசீலிக்க அனுமதித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம், மனுதாரர் கோரிய தடை உத்தரவு தொடர்பான உண்மைகளை முன்வைக்க இன்று (15) அனுமதி வழங்கியது.