2,100 கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கிவைப்பு

Date:

டிசம்பர் 2, 2023 வரை நடத்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் பரீட்சையைத் தொடர்ந்து, கிராம சேவையாளர் பதவிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் 2,100 பேருக்கு நியமன கடிதங்கள் இன்று வழங்கப்பட்டன.

இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் புதிய கிராம சேவையாளர் நியமனங்கள் இடம்பெற்றன.

பிரதேச செயலக மட்டத்தில் அதிக புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு கிராம சேவை உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட்டது.

குறைந்த வருமானம் பெறும் மக்களை மேம்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள ‘அஸ்வசும’ மற்றும் ‘உறுமய’ போன்ற வேலைத்திட்டங்கள் குறித்து புதிய கிராம அதிகாரிகளிடம் தெரிவித்த ஜனாதிபதி தமது பிரதேசங்களின் பொருளாதார அபிவிருத்திக்காக இந்த திட்டங்களில் தீவிரமாக இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...