Annual Master Athletics Championship: வெற்றிபெற்ற ஆசிரியர்களுக்கு புத்தளம் முக்கூட்டு தலைமை வாழ்த்து!

Date:

புத்தளம் நகரை சேர்ந்த விளையாட்டு துறை பொறுப்பாசிரியர்களும்,  சகோதரர்களுமான ஆசிரியர் எம்.எப்.எம். ஹுமாயூன் மற்றும் ஆசிரியர் எம்.எப்.எம்.துபைல் ஆகிய இருவரும் சுகதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 10th Annual Master Athletics Championship விளையாட்டுத் தொடரில் கலந்துக்கொண்டு வெற்றியடைந்துள்ளனர்.

உயரம் பாய்தல் போட்டியில் ஹுமாயூன் ஆசிரியர் 1.50 மீ. உயரத்தை தாண்டி இந்த தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.

இவர் சென்ற வருடம் 1.60 மீ உயரத்தை தாண்டி இலங்கையில் சாதனை படைத்திருந்தார். இதேவேளை இவர் நீளம் பாய்தல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.

அதேபோன்று ஆசிரியர் துபைல் 100 மீ. ஓட்டப்போட்டியில் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்று புத்தளம் மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவர்களது இந்த அயராத தொடர் முயற்சிக்கும் வெற்றிக்கும் புத்தளம் நகரின் முக்கூட்டு தலைமைகளான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளை, புத்தளம் பெரிய பள்ளி மற்றும் புத்தளம் நகர சபை என்பன தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.


(புத்தளம் எம்.யூ.எம்.சனூன்,கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

Popular

More like this
Related

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...

காற்றழுத்தம் நீடிக்கிறது: நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. மழை

இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி, நாட்டின் கடற்பகுதியில் தொடர்ந்து...

இலங்கை – பெலாரஸ் இடையே சுகாதாரத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கை மற்றும் பெலாரஸ் குடியரசுக்கு இடையே சுகாதார சேவை தொடர்பான புரிந்துணர்வு...