இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க அதிகாரி டொனால்ட் லூ

Date:

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை செயலர் டொனால்ட் லூ இலங்கை விஜயம் செய்யவுள்ளார்.

அமெரிக்காவின் துணை செயலர் டொனால்ட் லூ,  இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை இன்று வெள்ளிக்கிழமை (10) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மேற்கொள்கிறார்.

டொனால்ட் லூவின் 3 நாடுகளுக்கான விஜயமானது ஒவ்வொரு நாட்டுடனும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்பதுடன் சுதந்திரமான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் ஆதரவை நிரூபிக்கும் வகையில் அமையவுள்ளது.

இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கையுடனான அமெரிக்காவின் பங்களிப்பை ஆழப்படுத்தும் நோக்கில் கொழும்புக்கு வருகைத் தரும், டொனால்ட் லூ, முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான அமெரிக்காவின் ஆதரவையும், சுதந்திரமான மற்றும் ஜனநாயக சமூகத்தின் அடிப்படை வலுவான சிவில் சமூகத்தின் முக்கியத்துவத்தையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்துவார்.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...