உண்மை மற்றும் நல்லிணக்க திட்டம் இலங்கையில் செயற்படுவது அவசியம்: அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு

Date:

இலங்கையில் செயற்படும் உண்மை மற்றும் நல்லிணக்க திட்டமொன்று காணப்படுவது அவசியம் என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர்  டொனால்ட் லு தெரிவித்துள்ளார்.

அதேநேரம்  எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிபெறும் தலைவர்கள்  இதனை முன்னெடுப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய கடன் மறுசீரமைப்புத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் அமெரிக்கா அபிவிருத்தி சகாவாக விளங்குவதற்கு தயார் இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு நிதி ஆலோசனை மற்றும் கடனை வழங்க தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பு உறவுகளை இலங்கை தொடர்ந்தும் வலுப்படுத்தவேண்டும் என அமெரிக்கா ஊக்குவிக்கின்றது ஆரோக்கியமான போட்டிதன்மையை பேணுவதற்கு வெளிநாட்டு தரப்புகள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு இலங்கை வாய்ப்புகளை வழங்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன் மூலம் கிடைக்கின்ற நன்மைகளை பொதுமக்களிற்கு வழங்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

 

 

Popular

More like this
Related

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...