உயர்தர வகுப்புகள் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்

Date:

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மாணவர்களின் நேரத்தை திறம்பட நிர்வகிக்கும் நோக்கில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைவாக, உயர்தரப் பாடத்திட்டத்தை உள்ளடக்குவதற்கு ஆசிரியர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கும் வகையில், க.பொ.த சாதாரண தரம் நிறைவடைந்தவுடன் பாடசாலைகளில் உயர்தரக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகிறது.

Popular

More like this
Related

2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை

2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை இடம்பெறவுள்ளது....

பல பிரதேசங்களில் மழைக்கு வாய்ப்பு!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...