கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு நாளை வழங்கப்படவிருந்த
நியமனம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கல்முனை மாகாண நீதிமன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவின் மூலம்
இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அதுவரை நியமனம் எதுவும் வழங்க கூடாதென பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆசிரியர் நியமனத்தில் பல குளறுபடிகள் காணப்படுவதாலும், ஆசிரியர் நியமனம் புள்ளிகளில் தவறுகள், மோசடி உள்ளமையை மாகாண நிருவாகம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி றாஸி முஹம்மத் ‘நியூஸ்நவ்’ க்கு தெரிவித்தார்.