சாதாரண தரப் பரீட்சையில் முறைகேடு: குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

Date:

தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (10) முறைப்பாடு செய்யவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள 2 பரீட்சை நிலையங்களிலும், ஹசலக்க பிரதேசத்தில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்திலும் இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன.

நேற்றைய தினம் (09) வழங்கப்பட்ட ஆங்கில வினாத்தாளை சில மாணவர்கள் தமது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி புகைப்படம் எடுத்து மற்றுமொரு தரப்பினருக்கு அனுப்பி அதற்குரிய விடைகளைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் குறித்த மாணவர்களின் கையடக்கத் தொலைபேசிகளைக் கைப்பற்றியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் பரீட்சை நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...