ஜனாதிபதி ரணில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் தற்போதைக்கு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்த விஜயத்தின் போது யாழ் போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடம் ஒன்றை திறந்து வைக்கவுள்ள ஜனாதிபதி கிளிநொச்சியில் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடம் ஒன்றையும் திறந்து வைக்கவுள்ளார்.

மேலும், வலி வடக்கு பகுதியில் ஒட்டகப்புலத்துக்குச் செல்லும் பிரதான பாதையினையும் உத்தியோகப்பூர்வமாக மக்களிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...