டிப்ளோமாதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம் வழங்க தீர்மானம்

Date:

500 டிப்ளோமாதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அந்த நியமனம் வழங்கப்படும் என்றும் கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

500 டிப்ளோமாதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை தற்போது இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் 100 பேரை தேசிய பாடசாலைகளுக்கும் ஏனைய 400 பேரை கிராமிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கும் என 500 ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி ரோஹிணி கவிரத்ன எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

 

ரோஹிணி கவிரத்ன எம்பி தமது கேள்வியின் போது இம்முறை ஆங்கில பாடத்தின் கேள்விகள் வழமையான முறைமைக்கு அப்பாற்பட்ட விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மத்திய மாகாணத்தில் பயிற்றுவிக்கப்பட்ட 5000 ஆங்கில பாட ஆசிரியர்களுக்கானவெற்றிடம் காணப்படுகிறது.
 

 

அதேபோன்று, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில பாடசாலைகளில் இராணுவத்தினரே ஆங்கில பாடத்தை கற்பிக்கின்றார்கள்.

அது தொடர்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த மேற்கண்டவாறு பதிலளித்தார்.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...