வாகன இறக்குமதிக்கு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Date:

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படுவதைக் காரணம் காட்டி தமக்குத் தேவையான வாகனங்களை கொண்டுவர அமைச்சர்கள் தயாராகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அதன் தலைவர் பிரசாத் மானகே இதனை தெரிவித்தார்.

 

வாகன இறக்குமதித் துறையில் நிலவும் பிரச்சனைகள் காரணமாக இதுவரை 50% – 60% மக்கள் தொழிலை கைவிட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

வாகனங்கள் இறக்குமதி தொடர்பாக 4 வருடங்களாக காத்திருக்கிறோம் என்றும் விரைவில் கொண்டு வருவோம் என்கிறார்கள்.

ஆனால் இதுவரை ஏற்றுமதி செய்யப்படவில்லை. நாங்கள் வாகனங்களை இறக்குமதி செய்யும்போது, ​​அரசாங்கம் 200% வரி விதிக்கிறது.

நாங்கள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடன் கலந்துரையாடினோம்.  முதலில் பஸ், லொறி போன்ற வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்றும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதத்தைப் பார்த்துவிட்டு அதனை செய்வோம் என தெரிவித்தார்.

மேலும் இதனைக் காரணம் காட்டி அமைச்சர்களுக்குத் தேவையான வாகனங்களைக் கொண்டுவர ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏனெனில் அண்மையில் அமைச்சர்கள் சபாநாயகரிடம் வாகனங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...