அரச சார்பற்ற நிறுவனங்கள் தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்!

Date:

ஆசிய சமூக சேவைத்துறையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGO), தரவரிசையில் இலங்கை முன்னேற்றமடைந்துள்ளது.

2022 ஆம் ஆண்டு கரும்புள்ளி அடைந்திருந்த இலங்கை, 2024 ஆம் ஆண்டில் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளது.

2024 ஆண்டு ஆசிய சமூக சேவை துறையின் செயற்றிறனை அளவிடும் DOING Good INDEX தரப்படுத்தப்படுத்தல் சுட்டிக்கமைய, இவ்வாண்டுக்கான பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.

இதற்கமைய கம்போடியா, இந்தியா, இந்தோனேஷியா, நேபாளம், பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் DOING OKEY குழுவில் இலங்கை இணைந்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் சுட்டெண் படி, இலங்கை பங்களாதேசுடன் தரவரிசையில் NOT DOING ENOUGH பிரிவில் இருந்தமை சுட்டடிக்காட்டத்தக்கது.

இலங்கையின் இந்த முன்னேற்றம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட பல சீர்திருத்தங்களின் பெறுபேறாக அமைந்துள்ளதாக, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சஞ்சீவ விமலகுணரத்ன தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அளவிடப்படும் இந்தக் குறியீட்டில், சிங்கப்பூர், சீனா, தைபே ஆகிய நாடுகளின் வகுதியான DOING WELL குழுவில் 2026 ஆண்டில் இணைவதற்கான மறுசீரமைப்புகள் இடம்பெறுவதாகவும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...