எனசல்கொல்ல மத்திய கல்லூரி கல்வி அபிவிருத்தி செயலக அங்குரார்ப்பண வைபவம்

Date:

கண்டி, தெல்தோட்டை எனசல்கொல்ல வித்துபதீப மத்தியக் கல்லூரியின் புனரமைக்கப்பட்ட கல்வி அபிவிருத்தி செயலகமும், அதிபர் காரியாலயமும் 27ம் திகதி வியாழக்கிழமை வெகு விமர்சையாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கல்லூரியின் 75வது வருட நிறைவு பவள விழா நினைவாக பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் ஏற்பாட்டில் முன்னாள் அதிபர், ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த கொழும்பு கொமோடிடிஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி அல்ஹாஜ் எம்.ஸி. பஹார்தீன் அவர்களின் பூரண நிதியுதவியுடன் கல்வி அபிவிருத்தி செயலகமும், அதிபர் காரியாலயமும் புனரமைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் கௌரவ அதிபர் அல்ஹாஜ் எம்.ஜீ.எம். நயீமுல்லாஹ் (SLPS – 1, B.Ed. Hons) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் தலைவி கொழும்பு அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் ஹாஜியானி நாஹுர் உம்மா காதர் ஜே.பி., கிளையின் செயலாளர் முஸ்லிம் விவாகப் பதிவாளர் அல்ஹாஜ் நாஹுர்ரஹீம் ஜே.பி. உட்பட கொழும்புக் கிளையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், கல்லூரி பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பாடசாலை முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் புதிதாக புனரமைக்கப்பட்டுள்ள செயலகப் பெயர்ப் பலகையினை பிரதம அதிதியின் பாரியார் திருமதி ஹாஜியானி நூர் ஸஹ்ரியா பஹார்தீன் அவர்கள் திரை நீக்கம் செய்து வைத்தார்.

புனரமைக்கப்பட்ட கல்வி அபிவிருத்தி செயலகத்தினை பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த கொழும்பு கொமோடிடிஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி அல்ஹாஜ் எம்.ஸி. பஹார்தீன் அவர்களும், அவர் தம் பாரியார் திருமதி ஹாஜியானி நூர் ஸஹ்ரியா பஹார்தீன் அவர்களும் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் காட்சி.
புதிதாக புனரமைக்கப்பட்டுள்ள செயலகப் பெயர்ப் பலகையினை பிரதம அதிதியின் பாரியார் திருமதி ஹாஜியானி நூர் ஸஹ்ரியா பஹார்தீன் அவர்கள் திரை நீக்கம் செய்து வைக்கும் காட்சி
செயலகத்தினை பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த கொழும்பு கொமோடிடிஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி அல்ஹாஜ் எம்.ஸி. பஹார்தீன் அவர்களை கல்லூரி சமூகம் கௌரவிக்கும் காட்சி.
செயலகத்தினுள் பிரதம அதிதிகளுடன் கல்லூரி அதிபர் கௌரவ அதிபர் அல்ஹாஜ் எம்.ஜீ.எம். நயீமுல்லாஹ் (SLPS – 1, B.Ed. Hons) அவர்கள், பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் தலைவி கொழும்பு அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் ஹாஜியானி நாஹுர் உம்மா காதர் ஜே.பி., கிளையின் செயலாளர் முஸ்லிம் விவாகப் பதிவாளர் அல்ஹாஜ் நாஹுர்ரஹீம் ஜே.பி. பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர் ஏ. எம். நவாஸ், கொழும்புக் கிளையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் இப்ராஹிம் இஸ்ஹாக் ஆகியோர் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபடும் காட்சி.
கல்வி அபிவிருத்தி செயலகத்தின் முன்புறத்தோற்றம்.
கல்வி அபிவிருத்தி செயலகத்தின் உட்புறத்தோற்றம்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...