240 நாட்களை கடந்து இஸ்ரேல் – காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் போர் தொடர்ந்து வருகிறது.
இதில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரிதும் அதிர்ச்சியை அளித்து வருகிறது.
இஸ்ரேல், காசா என இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் பலஸ்தீனிய மக்களின் நிலை தான் மிகவும் மோசம்.
காசாவில் கடைசி நம்பிக்கையாக இருந்த ரஃபா நகரின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த முகாமில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் பதுங்கியிருந்ததாக கூறி வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆனால் இஸ்ரேலின் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட அப்பாவி பலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி இஸ்ரேல் ராணுவத் தரப்பினர் கூறுகையில், உளவுத்துறை மூலம் எங்களுக்கு தகவல் கிடைத்தது.
அந்த பள்ளியில் ஹமாஸ் அமைப்பினர் பலரும் மறைந்திருந்தனர். இதுதொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களையும் ஆய்வு செய்தோம். எனவே தான் தாக்குதலை தொடுத்தோம் என்று தெரிவித்தனர்.
ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணம் மற்றும் வேலை சார் ஏஜென்சி (UNRWA) தலைவர் பிலிப்பீ லஸ்ஸாரினி கூறுகையில், அந்த பள்ளி ஐ.நா சபையின் பலஸ்தீனிய அகதிகள் ஏஜென்சியால் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேல் போரால் இடம்பெயர்ந்த சுமார் 6 ஆயிரம் பேர் இந்த முகாமில் தான் தஞ்சமடைந்திருந்தனர்.