கடுமையான வெப்பம் காரணமாக ஹஜ் யாத்திரீகர்கள் 19 பேர் உயிரிழப்பு!

Date:

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு சென்ற 19 பேர் கடுமையான வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், உயிரிழந்த அனைவரும் அதிக வெப்பம் காரணமாகவே உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

உயிரிழந்தவர்களில், இந்த ஆண்டு மக்கா மற்றும் மதீனாவுக்கு வருகை தந்தவர்களில் ஈரானிய யாத்ரீகர்களும் உள்ளடங்குவதாகவும் ஈரான் நாட்டின் ரெட் கிரசண்ட்டின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு சுமார் 2 மில்லியன் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரையில் பங்கேற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் துரதிஷ்டவசமாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை (104 டிகிரி பாரன்ஹீட்) தாண்டியுள்ளது. இதனால் யாத்ரீகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

மேலும், உயிரிழந்தவர்கள் தொடர்பில் சவூதி அரேபியா ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஹஜ்ஜின் போது குறைந்தது 240 பேர் உயிரிழந்திருந்தனர். இதில் இந்தோனேசியாவைச் சேர்ந்த பலர் அடங்கினர்.

கடந்த ஆண்டு 10,000 க்கும் மேற்பட்ட வெப்பம் தொடர்பான நோய்கள் பதிவு செய்யப்பட்டன, அவற்றில் 10 சதவீதம் வெப்ப பக்கவாதம் என சவுதி அதிகாரி ஒருவர் இந்த வாரம் AFP சர்வதேச செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

ஒவ்வொரு நாளும் பிராந்திய வெப்பநிலை 0.4 செல்சியஸாக அதிகரித்து வருவதாகவும், மோசமான வெப்பம் தணிப்பு நடவடிக்கைகளை விட அதிகமாக இருக்கலாம் என்றும் ஒரு சவுதி அரசின் ஆய்வு கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...