கிழக்கு மாகாணத்தில் உள்ள 05 அமைச்சுகள் மற்றும் 40 திணைக்களங்களில் மாற்றம்:வர்த்தமானி வெளியீடு!

Date:

கிழக்கு மாகாணத்தில் உள்ள 5 அமைச்சுக்களின் கீழ் உள்ள 40 திணைக்களங்களை புதிய வர்த்தமானி ஊடாக  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மாற்றியமைத்துள்ளதுடன், அமைச்சுகளுக்கான  புதிய செயலாளர்களையும் நியமித்துள்ளார்.

ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி  அறிவிப்பு ஆளுநரால் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், கிழக்கு மாகாணத்தில்  கடந்த ஒரு வருட காலத்தில் 8,031 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 2,695 வேலைத்திட்டங்கள் ஆளுநர் செந்தில் தொண்டமானால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வருடத்தில்  வலுவான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு, புதிய கட்டமைப்பினை உருவாக்குவதற்காக இவ்வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒன்பது  மாகாணங்கள் இருக்கும் நிலையில்  கிழக்கு மாகாணத்தில் மாத்திரமே இவ்வாறான ஒரு அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...