கொழும்பிற்கு வருகை தந்த இந்திய கடற்படைக் கப்பல்: 1.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதிரிப்பாகங்களை வழங்கியது !

Date:

இந்திய கடலோர காவல்படையின் ரோந்து கப்பலான சாசெட் இரண்டு நாள் பயணமாக கடந்த 19 ஆம் திகதியன்று கொழும்பை வந்தடைந்த நிலையில் இலங்கையில் இருந்து கடந்த 21 ஆம் திகதி மீண்டும் இந்தியா புறப்பட்டுள்ளது.

இந்தக் கப்பலில் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய உதிரி பாகங்கள் இலங்கை கடலோரக் காவல்படையின் கப்பலான சுரக்ஷாவிற்கு இலவசமாகக் கொண்டு வந்துள்ளது.

இந்திய கடலோரக் காவல்படையின் கட்டளை அதிகாரி, பிரதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆர்.ராஜேஷ் நம்பிராஜ், இலங்கை கடற்படையின் மேற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் டி.எஸ்.கே.பெரேரா மற்றும் இலங்கை கரையோர கடற்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பூஜித விதான ஆகியோரை சந்தித்தார்.

இதன்போது இந்திய கடலோர காவல்படை கப்பலில் கொண்டுவரப்பட்ட உதிரிப் பாகங்கள்  ஒப்படைக்கப்பட்டன.

இதில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, மேற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் டிஎஸ்கே பெரேரா, இலங்கை கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பூஜித விதான மற்றும் மூத்த இலங்கை கடலோர காவல்படை மற்றும் கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

எஸ்.எல்.சி.ஜி.எஸ் சுரக்ஷா கப்பலானது கடந்த 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு கடல் ரோந்துக் கப்பலாகும்.

முன்னதாக ஜூன் 2021 மற்றும் ஏப்ரல் 2022 இல் இந்தியா சுரக்ஷா கப்பலுக்கான உதிரி பாகங்களை நன்கொடையாக வழங்கியது.  ஜனவரி 2024 இல் ஹாலோன் சிலிண்டர்களை மீண்டும் நிரப்புவதற்கான உதவியையும் வழங்கியது.

இந்த செயற்பாடானது, பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பின் பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்ளும் திறனை வளர்ப்பதற்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இது அடையாளப்படுத்துகிறது.

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...