சர்வ ஜன பலய கூட்டணியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர்: பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பம்

Date:

விமல் வீரவன்சவை மையப்படுத்திய சர்வ ஜன பலய கூட்டணி ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரத்தை முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை முன்வைப்பதாகவும் மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

காலி மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இடதுசாரி தேசியவாதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை மக்களின் முதன்மையான மாற்றமாக ‘சர்வ ஜன பலய’ கூட்டணி உருவெடுத்துள்ளது என அவர் தெரிவித்தார்.

இடதுசாரி தேசியவாதத்தை ஆதரிக்கும் ஒரே அரசியல் குழு தனது கூட்டணி என்று கூறிய அவர், மற்ற அனைத்து கட்சிகளும் வலதுசாரி என்ற பதாகையின் கீழ் ஒன்றுபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க ஆகிய அனைவரும் அதனை கடைப்பிடிப்பதாகவும், தமது கூட்டணி மக்களுக்கு தனித்துவமான மாற்றீட்டை வழங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அரசியல் பிரச்சாரங்களை விரைவில் ஆரம்பிக்க சர்வ ஜன பலய கூட்டணி தயாராக இருப்பதாகவும், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் பெயரிடப்படுவார் எனவும் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...