சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு!

Date:

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் 10 நாட்களில் வெளியாகுமென வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை பெறுபேறுகளே வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பொதுத் தகவல் தொழில்நுட்பம் என்பதற்குப் பதிலாக கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை என மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை கடந்த மே மாதம் 6ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைபெற்றது.

3,527 பரீட்சை மத்திய நிலையங்களில், 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

இதில் 387,648 பாடசாலை விண்ணப்பதாரிகளும், 65,331 தனியார் விண்ணப்பதாரிகளும் பரீட்சைக்குத் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...