2024ஆம்ஆண்டு ஜுன் 5 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நாடெங்கும் பல பிரதேசங்களில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற ஏற்பாடாகியுள்ளன
அந்தவகையில் ரம்ய லங்கா நிறுவனத்தினால் புத்தளம் பிரதேசத்தில் சிரமதான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய புத்தளம் கரையோரப் பகுதியிலிருந்து பெரிய பள்ளிவாசல் மற்றும் முல்லிபுரம் வரை பிரதேசங்களில் தூய்மைப்படுத்தும் நோக்கில் மூன்று கட்டங்களாக பிரித்து சிரமதான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்காக பூரண ஒத்துழைப்பை புத்தளம் பிரதேச காரியாலயம் மற்றும் விமானப் படை என்பன வழங்க வுள்ளன.