தேசிய பொசன் வாரம் இன்று ஆரம்பம்: விசேட வசதிகள் ஏற்பாடு

Date:

தேசிய பொசன் வாரம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. அநுராதபுரம், மிஹிந்தலை, தந்திரிமலை ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு இவ்வருடமும் பொசன் பண்டிகையை  நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இருந்து வரும் இலட்சக்கணக்கான பக்தர்களின் உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய பொசன் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் பள்ளிவாசல்கள் பொசன் வாரத்தில் மூடப்பட்டுள்ளன.

மேலும் தேசிய பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 12 பாடசாலைகளுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இப்பாடசாலைகள் வரும் 20ம் திகதி முதல் 23ம் திகதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...