பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த சாதனை வீரன் ஹஷன் ஸலாமா

Date:

திருகோணமலையை சேர்ந்த முஹம்மட் பஹ்மி அவர்களின் புதல்வன் ஹஷன் ஸலாமா இன்று (15) இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கிடையிலான 42Km தூரத்தினையுடைய பாக்கு நீரினையை நீந்தி சாதனை படைத்துள்ளார்.

இன்று (15) அதிகாலை 02.00 மணிக்குத் தொடங்கி முற்பகல் 11.00 மணியளவில்   நீந்தி முடித்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த ஒரு மாணவன் என்ற அடிப்படையில் இலங்கை மக்கள் அனைவரும் இவரது சாதனைக்கு சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

 பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த இலங்­கையின் எட்­டா­வது நப­ரா­கவும், பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த உலகின் முத­லா­வது முஸ்லிம் நப­ரா­கவும் ஹஷன் ஸலாமா திகழ்கிறார்.

தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வய­தான இவர் கடந்த மூன்று மாதங்­க­ளாக இச் சாதனை முயற்­சிக்­கான தீவிர பயிற்­சியில் ஈடு­பட்டு வரு­கின்றார்.

கடந்த மாதம் 18ஆம் திகதி இவர் பாக்கு நீரி­ணையின் இலங்கை கடல் எல்­லை­யி­லி­ருந்து தலை­மன்னார் வரை­யான தூரத்தை பயிற்சி அடிப்­ப­டையில் நீந்திக் கடந்­துள்ளார். இவ­ருக்­கான நீச்சல் பயிற்­சி­களை விமா­னப்­படை கோப்ரல் றொசான் அபே­சுந்­தர வழங்கி வரு­கின்றார்.

றொசான் அபே­சுந்­தர 2021 ம் ஆண்டு தலை­மன்­னா­ரி­லி­ருந்து தனுஸ்­கோ­டிக்கு நீந்திச் சென்று மீளவும் அங்­கி­ருந்து தலை­மன்­னா­ருக்கு 28 மணி­நேரம், 19 நிமிடம்,58 செக்­கனில் நீச்­சலை நிறைவு செய்து, ஆழிக்­கு­மரன் ஆனந்தன் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த 51 மணி­நேர சாத­னையை முறி­ய­டித்த சாத­னை­யாளர் ஆவார்.

மேலும் கடந்த இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் பாக்கு நீரி­ணையை நீந்­திக்­க­டந்த திரு­கோ­ண­ம­லையைச் சேரந்த ஹரி­கரன் தன்­வந்­தை­யையும் இவரே பயிற்­று­வித்­தி­ருந்தார்.

இலங்­கை­ய­ரான இள வய­தை­யு­டைய பஹ்மி ஹஸன் சலாமா நாட்டின் விளை­யாட்டு வர­லாற்­றிலே தனது பெயரை பதிந்து கொள்­வ­தற்­காக தனது இலக்­கினை அடைந்து கொள்ளும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்ளார்.

இது­மட்­டு­மல்­லாமல், திரு­கோண மலையில் உள்ள கிழக்கு மாகாண சுற்­றுலா பணி­ய­கத்­தினால் நடாத்­தப்­பட்ட அகில இலங்கை கடல் நீச்சல் போட்­டியில் வெற்­றி­யா­ள­ராக தெரிவாகியிருக்கின்றார்.

பஹ்மி ஹஸன் சலாமா விளையாட்டுத் துறைக்கு அப்பால் சென்று தனது அர்ப்பணிப்புகளூடாக நீருக்குக் கீழான சுத்திகரிப்புப் பணிகள் மற்றும் கடற் பாதுகாப்புச் செயன்முறைகள் தொடர்பாகவும் தனது நேரடி பங்களிப்பினை வழங்கியுள்ளார்.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...