புதிய காத்தான்குடி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி : காஸா சிறுவர் நிதியத்துக்கு நிதி நன்கொடை!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய காத்தான்குடி அல்-அக்ஸா ஜும்ஆ பள்ளிவாயிலுக்கு இன்று விஜயம் செய்தார்.

இதன் போது பலஸ்தீன் காஸா மக்களுக்காக நடைபெற்ற துஆ பிரார்த்தனையிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார்.

பள்ளிவாயிலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை
முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் மற்றும் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஸ்தாபிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்துக்கு புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசல், ஒரு கோடியே 7 இலட்சத்து 69,417 ரூபாய் (10,769,417) நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த பள்ளிவாசலில் இன்று   நடைபெற்ற விசேட பிரார்த்தனையின் பின்னர், காஸா நிதியத்துக்கான காசோலை பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், அலி சாஹீர் மௌலானா ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்கா உட்பட பிரமுகர்கள் உலமாக்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு...

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...

சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக...