சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

Date:

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டிற்காக சுங்கத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட மொத்த வருமான இலக்கு 2.206 டிரில்லியன் ரூபாயாகும்.

அதில் ஒரு டிரில்லியன் ரூபாய் வருமானத்தை நேற்று முன்தினம் நிலவரப்படி ஈட்ட முடிந்துள்ளதாக சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வருடத்தின் பாதியைக் கடப்பதற்கு முன்னரே இவ்வாறானதொரு பாரிய வருமான இலக்கை அடைய முடிந்தமை, சுங்கத் திணைக்கள வரலாற்றில் ஒரு விசேட மைல்கல் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசின் வருமான இலக்குகளை அடைவதற்கு சுங்கத் திணைக்களம் வழங்கும் பங்களிப்பை இந்த வெற்றி மேலும் உறுதிப்படுத்துவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வருடத்தின் எஞ்சிய காலப்பகுதியிலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் வருமான இலக்குகளை அதிகரிப்பதே தமது எதிர்பார்ப்பு என்றும் சுங்கத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

டெங்கு பரவல் காரணமாக மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்

 மொறட்டுவை பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின்...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: காயமடைந்த சிறை அதிகாரிகளை சந்தித்த அமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வரும்...

காஸாவில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால ஹமாஸ் ஆட்சி கலைப்பு: நிர்வாகப் பொறுப்பை ஏற்கிறது நிபுணர்கள் குழு!

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை கடந்த 20 ஆண்டுகளாக நிர்வகித்து வந்த தன்னாட்சி...